Monday 22 February 2010

விரதம் பற்றி சில தகவல்கள்...

have already seen this
நமது கலாச்சாரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்க வழக்கத்துடன் விரதம் இருக்கும் ஒரு பழக்கமும் வழக்கத்தில் உள்ளது.ஏகாதசி விரதம், கிருத்திகை விரதம், சஷ்டி விரதம், சிவராத்திரி விரதம், அமாவாசை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என்று அடுக்கடுக்காக விரதங்கள்.இந்த விரதங்கள் எதற்காக? இதனால் என்ன நன்மை? என்றெல்லாம் ஆராயப்போனால் அதிசயிக்கவைக்கும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.விரதத்துக்கு இவ்வளவு மகிமையா என்று அவை எண்ண வைக்கின்றன.
"ம்"என்பது, ஒன்றில் இருந்து விடுபடுவதை குறிக்கும் சப்தம்.இதோடு "த" சேர்ந்து "தம்" என ஆகும்போது அது மிக வேகமாக நடைபெறுவதைக் குறிக்கிறது.இந்த வேகம் மிக மிக வேகமெடுக்கும்போது 'ரதம்' ஆகிறது. இந்த ரதத்தோடு 'வி' சேரும்போது வினை ஏற்படுகிறது. அது என்ன வினை?

உடம்பில் ரத்தம் ஓடியபடி உள்ளது.

இதயம் துடித்தபடியே உள்ளது.இந்த இரண்டும் ஒரு சீரான வேகத்தில் செயல்பட்டபடி உள்ளன.இந்த வேகத்தைக் கூட்டிக் குறைப்பவைதான் எண்ணங்கள்.

அதிர்ச்சிகரமான செய்திகள், அச்சமூட்டும் அனுபவங்கள், இதயத்துடிப்பை அதிகரிக்கும்; இரத்த ஓட்டத்தையும் வேகப்படுத்தும். இதனைத்தான் இரத்த அழுத்தம் என்கிறோம்.விரதகாலத்தில் அதாவது எதுவும் உண்ணாமல் மனதை இறைசிந்தனையில் மட்டுமே வைத்துக்கொள்ளும்போது ஜீரண உறுப்புகள், சுரப்பிகள் ஓய்வு பெறுகின்றன.இதயத்துடிப்பும் சீரான வேகம் அடைகிறது.இரத்த ஓட்டத்திலும் உணவுப் பொருள்களின் சக்திப்பொருள்கள் கலப்பது நிகழாமல் இரத்தம் தன் சேமிப்பில் உள்ள சக்தி ஆதாரங்களை எடுத்துச் செயல்படுகிறது.இதனால் உடம்பின் நாடிகளில் கூட சீரான தன்மை ஏற்படுகிறது.விரதத்திற்கு பின்னாலே இப்படி அடுக்கடுக்கான நன்மைகள் இருப்பதை அந்த வெளிநாட்டுப்  பெண்மணி கண்டறிந்து பெரிதும் வியந்தார்.

விரதத்துக்கும் பட்டினிக்கும் நிறைய வேற்றுமை உள்ளது.பட்டினியின் போது மனதில் எதிர்மறையான எண்ணங்கள் இருந்தால் அதனால் பாதிப்பு உருவாகும்.ஆனால் விரதம் என்பது மன பலத்தால் மன நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது.இப்படிப்பட்ட விரதத்தையும் நினைத்த நேரத்தில் செயல்படுத்த நமது முன்னோர்கள் அனுமதிக்கவில்லை.அதற்கென்று சரியான கால நேரங்களில் விரதங்களை அனுஷ்டிக்கச் சொன்னார்கள்.இதை எல்லாம் அறிந்த அந்த பெண்மணியை அடுத்து கவர்ந்த மிக முக்கியமான விஷயம்தான் சகுனங்கள்.

ஆச்சர்யங்கள் தொடரும்...

3 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

//விரதம் என்பது மன பலத்தால் மன நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது//

உண்மை.

Chitra said...

விரதத்துக்கும் பட்டினிக்கும் நிறைய வேற்றுமை உள்ளது.பட்டினியின் போது மனதில் எதிர்மறையான எண்ணங்கள் இருந்தால் அதனால் பாதிப்பு உருவாகும்.ஆனால் விரதம் என்பது மன பலத்தால் மன நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது.இப்படிப்பட்ட விரதத்தையும் நினைத்த நேரத்தில் செயல்படுத்த நமது முன்னோர்கள் அனுமதிக்கவில்லை.அதற்கென்று சரியான கால நேரங்களில் விரதங்களை அனுஷ்டிக்கச் சொன்னார்கள்.


..................very interesting.

angel said...

அதற்கென்று சரியான கால நேரங்களில் விரதங்களை அனுஷ்டிக்கச் சொன்னார்கள்.

and i read if we practice on tht paricular timing the planets to support it.

Post a Comment