Sunday, 21 February 2010

எண்ணெய்க்குளியலில் இவ்வளவு விஷயங்களா...

have already seen this
ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் தாம்பத்ய சுகத்தில் ஈடுபடும்போது ஒரு குளிர்ந்த உடல் ஒரு வெப்ப உடல் என்கிற சேர்க்கை நிகழ்கிறது.
அந்த வெளிநாட்டுப்பெண்மணியின் ஆய்வில் அடுத்தடுத்த கட்டங்கள் மிக சுவாரஸ்யமானவை. அதில் பெண்கள் செவ்வாய், வெள்ளியில் எண்ணெய் தேய்த்து தலைமுழுக்கு போடுவதும் ஒன்று. நல்லெண்ணெயில் ஊறிக் குளிப்பது என்பதே அந்த பெண்ணுக்கு ஓர் அதிசயமான விஷயமாகத்தான் தோன்றியது.

அந்த பெண்ணே குளித்தும் பார்த்தபோதுதான் அதன் சுகமும் விளங்கியது.அன்றெல்லாம் மிக ஆழ்ந்த உறக்கம்.கண்களிலும் அப்படி ஒரு குளிர்ச்சி.ஜலதோஷம் கூட பிடித்துக்கொண்டது.பிறகுதான் அந்த பெண்மணிக்கு பல புதிய செய்திகள் தெரிய வந்தன.வீட்டு வேலைகளால் உண்டாகும் உஷ்ணத்தை-குறிப்பாக அடுப்படியில் விறகு அடுப்பு அருகே அமர்ந்து சமைக்கும்போது உருவாகும் வெப்பத்தை தணிக்கத்தான் எண்ணெய்க்குளியல்.எல்லாவற்றுக்கும் மேலாக உடம்பின் ரோமக்கால்கள் நல்லெண்ணெயால் நெகிழ்ந்து போகின்றன.தோலிலும் பளபளப்பு கூடுகிறது.உடம்பு வெளியிடும் வெப்பம் குறைகிறது.

இந்த எண்ணெய்க்குளியலையும் செவ்வாய், வெள்ளி என்று வைத்ததன் பின்னே ஒரு நுட்பமான காரணம் இருந்தது.பெண்களுக்கு செவ்வாய், வெள்ளி என்றால்-ஆண்களுக்கு புதனும் சனியும்.இதனால் ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் தாம்பத்ய சுகத்தில் ஈடுபடும்போது ஒரு குளிர்ந்த உடல் ஒரு வெப்ப உடல் என்கிற சேர்க்கை நிகழ்கிறது. இது கருச்சேர்க்கைக்கும் பெரிதும் உதவுகிறது.இந்த எண்ணெய்க் குளியலை அடுத்து பொட்டு வைத்துக் கொள்ளும் அந்த கலாச்சாரம்.

புருவ மையத்தில் மஞ்சள் மற்றும் செந்தூரம் கலந்து உருவாக்கப்பட்ட குங்குமம் இரு விதங்களில் செயலாற்றுகிறது.ஒரு பெண்ணைப் பார்ப்பவரின் பார்வைத் தாக்கத்தை குங்குமப்பொட்டு சிதற அடிக்கிறது.கழுத்து உடம்பில் புருவ மையத்தில்தான் ஆக்ஞா சக்கரம் உள்ளது.அது அங்கு தேங்கும் துர்நீரை உறிஞ்சி ஆவியாக்கி அந்த பாகத்தை பாதுகாக்கிறது.இதனால் பார்வைக்கோளாறு தவிர்க்கப்படுவதோடு நுட்பமாக சிந்திக்கும் ஆற்றலும் வளர்கிறது.

இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு நுட்பமான காரணம்!

ஆச்சர்யங்கள் தொடரும்...

2 comments:

Chitra said...

சின்ன சின்ன விஷயங்களில் கூட, எத்தனை எத்தனை ஆச்சர்யமான காரணங்கள் இருக்கு. பகிர்வுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

அவசர உலகத்தில் எண்ணெய் குளியலுக்கு எங்கே நேரமிருக்கிறது?ஆனாலும் தினமும் காலையில் நடு மண்டையில் நல்லெண்ணை தேய்த்து குளிப்பதே எனது பழக்கம்.

Post a Comment