சகுனத்தைப்பற்றிய அந்த பெண்மணியின் ஆய்வு, கால நேரம் என்றால் என்ன என்பதை உணர்த்துவதாக இருந்தது.உண்மையில் காலம் என்பது தினந்தோறும் இரவு பகலாக விரிந்து கிடக்கிறது.இதில் பூமியில் மட்டும்தான் பௌர்ணமி, அமாவாசை போன்ற வானியல் நிகழ்வுகளை உணர முடியும்.அதை வைத்தே ஒவ்வொரு நாளும் இரவுப்பொழுதில் வித்தியாசங்களையும் உணர முடியும்.இந்த வித்தியாசங்களை வைத்தே ஒவ்வொரு நாளுக்கும் அடையாளமாகப் பெயர்கள் இடப்பட்டன.இதில் இருந்து தான் திதி, ஹோரை, கிழமை, தேதி என்று சகலமும் அறிய வந்தது.இதனால் நூறு ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஒரு நாளைக்கூட நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும் ஒரு நிலை இன்று உள்ளது.அந்த நாளில் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம், அன்றைய தேதி, அன்றைய கிழமை, அன்றைய திதி என்று சகலத்தையும் கூறிவிட முடியும். ஒரு படி மேலே போய் அன்றைக்கு என்ன நட்சத்திரம், அது எவ்வளவு நாழிகை நேரம் உள்ளது என்பதை கூட கூறிவிட முடியும்.இது அவ்வளவுமே மனிதன் தன் வான சாஸ்திர அறிவால் கண்டறிந்த உண்மைகள்.சுருக்கமாக கூறுவதானால் இது மாயமோ, மந்திரமோ அல்ல.இது கணக்கு!
இந்தக் கணக்குகள்தான் சகுனங்களும் செயல்படுகின்றன.ஒரு வீட்டின் ஈசான்ய பாகத்தில் காகம் ஒன்று இடைவிடாது கரைந்தால், அந்த வீட்டுக்காரருக்கு ஒரு பெரிய இடத்தில் இருந்து அழைப்பு வருகிறது என்பது உட்பொருள்.கொல்லையில் காகம் கரைந்தால் உறவினர்கள் வருகின்றனர்.வெளியேறும்போது பூனை குறுக்கே போனால் அது எந்த பக்கத்தில் இருந்து எந்த பக்கம் செல்கிறது என்பதை வைத்து அதனுள் ஒரு செய்தி உள்ளது.
அதேபோலத்தான் எதிரில் ஒற்றை பிராமணன் வருவது, சுமங்கலி வருவது.கர்ப்பவதி வருவது, முடவன் வருவது என்று ஒவ்வொன்றும்...இவை அவ்வளவும் ஒரு செய்தி. இதை உணர அந்த கால நேர கணக்கு தெரிய வேண்டும். அது தெரிந்தால் அதைக்கொண்டு சகுனக்காட்சிகளை கூட்டிக் கழித்து நடக்க போவதை முன்பே கூறிவிடலாம்.
மந்திரி வருவதற்கு முன்னால் சைரன் கார் வருவது போன்றது இந்த சகுனங்கள்.ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்பாடுகளுக்கு ஏற்ப அதன் தொடர்புகளுக்கு ஏற்ப, காலம் அது தொடர்பான செய்திகளைக் கூறிக் கொண்டுதான் உள்ளது.
ஆனால் அதை தெரிந்து கொள்ளும், புரிந்து கொள்ளும் அறிவுதான் மனிதனிடம் குறைவாக உள்ளது.அப்பெண்மணியோ சில சகுனங்களை பரீட்சை செய்து பார்த்து உண்மையை அறிந்து வாயைப் பிளந்து விட்டார்.
ஆச்சர்யங்கள் தொடரும்...
Tuesday, 23 February 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சுருக்கமாக கூறுவதானால் இது மாயமோ, மந்திரமோ அல்ல.இது கணக்கு!
....ஓ!
அதை தெரிந்து கொள்ளும், புரிந்து கொள்ளும் அறிவுதான் மனிதனிடம் குறைவாக உள்ளது.
mm if they understand thts much better
Post a Comment