Saturday, 20 February 2010

சமைக்கும் முறை தந்த ஆச்சர்யம்.

have already seen this
அந்தப்பெண்மணியை வியப்படைய வைத்த அடுத்த விஷயம் நமது குடும்பப்பெண்கள் வீட்டி சமைக்கும் முறை. குறிப்பாக ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டி அதை வழித்தெடுப்பதும், மொத்த வீட்டையும் கூட்டுவதும், பின் கொல்லைப் புறத்தில் உள்ள கிணற்றின் சகடையில் நீர் இறைப்பதும், துணி துவைப்பதும் என்கின்ற அடுக்கடுக்கான செயல்பாடுகள்...இவை ஒவ்வொன்றுமே ஒரு வித உடற்பயிற்சி.
துணி துவைப்பது கைக்கும் விரல்களுக்கும் பயிற்சி என்றால், தண்ணீர் இழுப்பது மூச்சுப்பயிற்சியாக அமைகிறது.வீடு கூட்டுவது இடுப்புக்கு பயிற்சியளிக்கிறது.இவ்வளவையும் செய்துவிட்டு இறுதியில் பூஜை அறையில் நெய்விளக்கேற்றி வழிபடுவது என்பதுதான் உச்சக்கட்டம்.

நெய்விளக்கு, நைட்ரஜன் ஆக்சைட் கதிர்களை வெளியேற்றுகிறது. அது  பரவும் இடத்தில் தவறான அணுக்கதிர் வீச்சுக்கு இடமேயில்லை.இப்படிப்பட்ட பெண்களின் கர்ப்பப்பை மிகவும் வலிமையுடையதாகவும் செறிவோடும் இருப்பதுதான் சிறப்பு.இதனால் இவர்களின் கருப்பைகளில் உருவாகும் குடும்ப வாரிசுகளின் ஆரோக்கியத்தில் ஒரு குறையும் இருக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

இப்படிப்பட்ட பணிகள் எதுவும் செய்யாமல் டி.வி.பார்ப்பது, சாப்பிடுவது, தூங்குவது என்றாகி விட்ட பெண்களின் கருப்பைகள், மயோமா என்னும் கட்டிக்கு இடமளித்து இரத்தப் பெருக்கையும் உருவாக்கி ஒரு கட்டத்தில் கர்ப்பப்பையையே வெட்டி எடுத்துவிட வேண்டி வந்து விடுகிறது.

பெண்மையின் ஆதார சக்தியும் ஆக்க சக்தியும் கர்ப்பப்பையின் சரியான செயல்பாட்டில்தான் உள்ளது.அதன் ஆரோக்கியத்தை மையமாக வைத்தே அவர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்திய நம் முன்னோர்களின் ஞானம், அந்த வெளி நாட்டுப்பெண்மணியை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது.

ஆச்சர்யங்கள் தொடரும்.
******
படத்தில் உள்ள ஆலயம், அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான நம்நந்தியடிகள் வாழ்வில் சிவபெருமானின் திருவிளையாடல் காரணமாக உருவானது.திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் திருப்பணி நடைபெறுவதற்காக நான்காவது வாரம், ஜனவரி 2010ல் பாலஸ்தாபனம் நடைபெற்றது.

ஆலயத்தைப் பற்றி மேலும் சில தகவல்களுக்கு இங்கே அமுக்கவும்.

6 comments:

Chitra said...

நெய்விளக்கு, நைட்ரஜன் ஆக்சைட் கதிர்களை வெளியேற்றுகிறது. அது பரவும் இடத்தில் தவறான அணுக்கதிர் வீச்சுக்கு இடமேயில்லை.இப்படிப்பட்ட பெண்களின் கர்ப்பப்பை மிகவும் வலிமையுடையதாகவும் செறிவோடும் இருப்பதுதான் சிறப்பு.இதனால் இவர்களின் கருப்பைகளில் உருவாகும் குடும்ப வாரிசுகளின் ஆரோக்கியத்தில் ஒரு குறையும் இருக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

............interesting info. Thank you.

malar said...

பதிவு நல்லத தான் சொல்லுது.நீங்க எப்படி ஏஞ்சல்?

angel said...

பாருங்க அக்கா நான் இல்ல

Posted by திருவாரூரிலிருந்து சரவணன்

geetha said...

வீட்டில் நெய்விளக்கு ஏற்றுவதில் இருக்கும் ஒரு நல்ல விஷத்தினை தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி.
எனக்கு தெரிந்தவர்களிடம், நண்பர்களிடம் தெரிவிக்க ஆரோக்கியமான செய்தியினை அறியச்செய்ததற்கு நன்றி!

geetha said...

என் முந்தைய கமென்ட்டில்" விஷயத்தினை" என்பதற்கு பதிலாக தவறாக டைப் ஆகிவிட்டது. மன்னிக்கவும்!

Shakthi said...

hi.. its intersting info........ am very eager to more posts like this in your blog... but i couldn't see anythin new for a long time from you....
What happens

Post a Comment