Thursday 18 February 2010

நான் படித்த நாவலில் இருந்து சில தகவல்கள்.

have already seen this
 (சிவம் பற்றிய புராண விஷயங்கள் மிகவும் அதிகம் என்பது நாம் அறிந்த விஷயம்தான். இதில் பல விஷயங்களை நாம்  உறுதியாக  புறம் தள்ள முடியாத அளவுக்கு அறிவியல் உண்மைகளை உள்ளடக்கி இருப்பது என்னை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.அதனால் நான் படித்த சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ளப்போகிறேன். இது என் சொந்த கருத்து அல்ல.விருப்பமிருப்பவர்கள் தொடருங்கள். இதில் உடன்பாடு இல்லாதவர்கள் அவர்கள் வழியைப் பார்க்கலாம். இறை நம்பிக்கை அல்லது தன்னம்பிக்கை இதில் ஏதாவது ஒன்றுதான் அனைவரையும் இந்த உலகில் எதிர்நீச்சல் போட வைக்கிறது என்பது என் எண்ணம்.)
 ******
சிவப் பிரசாதங்களில் விபூதியை அடுத்து உன்னதமாக கருதப்படுவது வில்வம். விஸ்வம் என்றால் புறத்தில் பெரிதாகத் தோன்றுதல் என்பது பொருள்.வில்வம் என்றால் அகத்தில் பெரிதாகத் தோன்றுவதாகும். வில்வம் என்பது தாவரவகையில் மரத்தில் இருந்து கிட்டும் மூலிகை ரகமாகும்.வில்வ இலைகள் மிகவும் குளிர்ச்சியை அளிப்பவை.

பொதுவில் சிவாலயங்களில் லிங்க சொரூபங்களுக்கு அர்ச்சனை செய்யும்போதும், பிற நேரங்களிலும் ருத்ரம் முதலிய மந்திரங்கள் கூறப்படுவது சகஜம்.சிவத்தின் நோக்கமே தவறானவர்களை அழிப்பது என்பதே.அத்ற்கே அந்த ஈசன் சதா சர்வ காலமும் கயிலையில் தியானத்தில் இருக்கிறான்.அவனது நடனம் உலக இயக்கத்தையும், அவனது தியானம் அந்த இயக்கத்திற்கான பலத்தையும் குறிப்பதாகும்.இப்படி இயங்கியும் இயக்கியும் செயல்படும் சிவமானது அக்னி சொரூபமானது.

எனவே கருவறைகளில் அது துதிக்கப்படும்போது வெப்பம் மிகுதியாகும்.மிகுந்த வெப்பத்தை உறிஞ்சி சீதோஷ்ண நிலையைச் சமச்சீர் செய்வது வில்வம்.அத்தோடு இதை உண்ணும்போது உள்ளுக்குள்ளும் குளிர்ச்சியை வில்வம் உருவாக்குகிறது.எனவேதான் சிவாலயங்களில் வில்வம் அர்ச்சனைக்குப் பெரிதும் உகந்ததாகக் கருதப்படுகிறது.

வில்வமரங்கள் மிகுதியாக உள்ள காடும்,குளிர்ந்த பனிமலையும் ஒன்றாகும்!

(தஞ்சை பெரிய கோவில் புகைப்படத்தை இங்கே நான் வைத்திருக்க காரணம் இது மதச் சின்னம் என்ற எல்லையைக் கடந்து தமிழனின் திறமைக்கு சான்றாக எனக்குத் தோன்றுகிறது.)

3 comments:

கோவி.கண்ணன் said...

//
எனவே கருவறைகளில் அது துதிக்கப்படும்போது வெப்பம் மிகுதியாகும்.மிகுந்த வெப்பத்தை உறிஞ்சி சீதோஷ்ண நிலையைச் சமச்சீர் செய்வது வில்வம்.//

காஞ்சி மஸ்சேஸ்வரர் கோவில் வில்வம் இல்லையா ? அந்த கருவறை மிகவும் வெப்பமான கருவறைன்னு சொல்லிக் கொள்கிறார்கள்

திருவாரூர் சரவணா said...

@ கோவி.கண்ணன்

//காஞ்சி மஸ்சேஸ்வரர் கோவில் வில்வம் இல்லையா ? அந்த கருவறை மிகவும் வெப்பமான கருவறைன்னு சொல்லிக் கொள்கிறார்கள்//

இந்த விபரங்கள் எதுவும் எனக்கு தெரியவில்லை அய்யா. நான் இவை பற்றி தொடர்ந்து படித்து என்னைக்கவர்ந்தவை பற்றிதான் எழுத முடிவு செய்திருக்கிறேன். தங்களுக்கு விபரம் தெரிந்தாலும் பின்னூட்டம்இடவும்.

virutcham said...

vilva is a leaf with medicinal qualities.
Non-beleivers in GOD can also use.


http://www.virutcham.com

Post a Comment